/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு செப்.6, 7ல் நேர்காணல்
/
ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு செப்.6, 7ல் நேர்காணல்
ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு செப்.6, 7ல் நேர்காணல்
ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு செப்.6, 7ல் நேர்காணல்
ADDED : செப் 02, 2025 03:30 AM
சிவகங்கை : 108 மற்றும் 102 ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிக்கான நேர்முக தேர்வு சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செப்., 6 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, வயது 24 முதல் 35 க்குள் இருத்தல் வேண்டும். உயரம் 162.5 செ.மீ.,க்கு குறையக்கூடாது.
3 ஆண்டு மற்றும் பேட்ஜ் வாகன லைசென்ஸ் எடுத்து, ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் டிரைவர்களுக்கு மாதம் ரூ.21,120 சம்பளம் வழங்கப்படும்.
இவர்களுக்கு எழுத்து, தொழில்நுட்ப, நேர்காணல், சாலை விதி முறை, கண்பார்வை திறன் மற்றும் மருத்துவ சார்ந்த தேர்வு நடத்தப்படும்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., படித்திருக்க வேண்டும்.
இல்லாவிடில் பி.எஸ்சி., வாழ்க்கை அறிவியல், விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம் ரூ.21,320. நேர்முக தேர்வன்று வயது 19 முதல் 30 க்குள் இருத்தல் வேண்டும். எழுத்து, மருத்துவ நேர்முக தேர்வு, நர்சிங் பணி சார்ந்த தேர்வு, நேர்காணல் தேர்வு நடத்தப்படும்.
பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பி.இ., மெக்கானிக்கல் இன்ஜி., அல்லது எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
வயது 35க்கு மேல் இருத்தல் கூடாது. தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். கல்வி தகுதிக்கான அனைத்து ஒரிஜினல், ஜெராக்ஸ் சான்றுகளை வழங்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 89259 41720 ல் தொடர்பு கொண்டு அறியலாம்.