/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிதி நிறுவன மோசடியில் பாதித்தோரிடம் சிவகங்கையில் மனு பெற்று விசாரணை
/
நிதி நிறுவன மோசடியில் பாதித்தோரிடம் சிவகங்கையில் மனு பெற்று விசாரணை
நிதி நிறுவன மோசடியில் பாதித்தோரிடம் சிவகங்கையில் மனு பெற்று விசாரணை
நிதி நிறுவன மோசடியில் பாதித்தோரிடம் சிவகங்கையில் மனு பெற்று விசாரணை
ADDED : ஜூன் 04, 2025 12:56 AM
சிவகங்கை: பரிவார் நிதி நிறுவன மோசடியில் சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் சிபிஐ போலீசார் மனு பெற்று விசாரித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிய நிறுவனம் தான் பரிவார் டெய்ரீஸ் அண்ட் அலைட் லிமிடெட் நிதி நிறுவனம். 2010 முதல் 2015க்குள் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 17,379 பேரிடம் ரூ.49.76 கோடி வசூலித்து ஏமாற்றியது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட சிலர் உயர்நீதிமன்றத்தை நாடினர். சிபிஐ போலீசார் அதன் இயக்குநர்கள் இருவரை கைது செய்தனர். இருவரும் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பரிவார் நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட சிலர் மனுதார்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி நிதி நிறுவன வழக்கில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் தலைமையில் குழு அமைத்து நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினர்.
இந்நிலையில் மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் களிடமிருந்து விவரங்களை சிபிஐ அதிகாரிகள் மனுவாக சேகரித்து வருகின்றனர்.
நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் சிபிஐ இன்ஸ்பெக்டர் தினேஸ் தலைமையில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மக்களிடம் விவரங்கள் அடங்கிய மனுவை பெற்றனர்.
நேற்று தொடங்கி சனி வரை பாதிக்கப்பட்ட மக்களிடம் மனுக்கள் பெற உள்ளனர். எனவே பரிவார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தங்களிடம் உள்ள விவரங்களை மனுவாக நேரில் வந்து சி.பி.ஐ., அதிகாரிகளிடம் கொடுக்கலாம்.