/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரம் பிரச்னைக்கு காரணம் அறங்காவலர் குழு இல்லாததா
/
மடப்புரம் பிரச்னைக்கு காரணம் அறங்காவலர் குழு இல்லாததா
மடப்புரம் பிரச்னைக்கு காரணம் அறங்காவலர் குழு இல்லாததா
மடப்புரம் பிரச்னைக்கு காரணம் அறங்காவலர் குழு இல்லாததா
ADDED : ஜூலை 06, 2025 02:50 AM

திருப்புவனம்,:மடப்புரத்தில் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் கோயிலில் அறங்காவலர் குழு இல்லாதது தான் காரணம் என கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோயில்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டு கோயில் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மட்டும் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படாததால் தான் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
மணலுார் வழக்கறிஞர் மணிமாறன் கூறுகையில்:
தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது எல்லாம் அறங்காவலர் குழு மடப்புரத்திற்கு நியமிக்கப்படுவது இல்லை.
உண்டியல் காணிக்கை எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அறங்காவலர் குழு தேவை. அறங்காவலர் குழு இல்லாததால் தான் மடப்புரம் கோயிலில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்து ஏழு நாட்களாகியும் இன்றுவரை கோயிலில் பரிகார பூஜை செய்யவே இல்லை. இது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஆடி பிறக்க உள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும், பக்தர்களின் தேவைக்காக உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அறங்காவலர் குழு இருந்தால் தான் அது நடக்கும், என்றார்.