/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.புதுார் பாலைவன ஒன்றியமாக மாறிப் போனாலும் வியப்பதற்கில்லை
/
எஸ்.புதுார் பாலைவன ஒன்றியமாக மாறிப் போனாலும் வியப்பதற்கில்லை
எஸ்.புதுார் பாலைவன ஒன்றியமாக மாறிப் போனாலும் வியப்பதற்கில்லை
எஸ்.புதுார் பாலைவன ஒன்றியமாக மாறிப் போனாலும் வியப்பதற்கில்லை
ADDED : மே 10, 2024 11:14 PM
மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் நெல் கடலை, மிளகாய் சாகுபடி செய்யக்கூடிய முக்கிய பகுதியாக எஸ்.புதுார் உள்ளது. இங்குள்ள மலைத்தொடர்களில் பெய்யும் மழை ஊற்று நீராக அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை கட்டுக்குள் இருக்க உதவுகிறது.
இதன் மூலம் விவசாயிகள் ஆண்டு முழுவதும் கிணறு மூலம் பயிர் சாகுபடி செய்தனர்.
தமிழகத்தில் வறட்சி வாட்டிய காலத்திலும் கூட இப்பகுதியில் பல இடங்களில் விவசாயம் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் சில ஆண்டுகளாக இவ்வொன்றியத்தில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் கேள்விக்குறியாகி வருகிறது. குறிப்பாக சிலர் தனி நபர்களிடம் உள்ள இடங்களை மொத்தமாக வாங்கி அதை பண்ணை தோட்டங்களாக மாற்றி வருகின்றனர்.
அவற்றில் உள்ள மரங்களை வெட்டிவிட்டு பண்ணை தோட்டம் என்ற பெயரில் தனி நபர்களுக்கு வீடு கட்ட விலை பேசுகின்றனர். மேலும் அருகேயுள்ள மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் அங்குள்ள மரங்களை வெட்டி வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு அருகே உள்ள காடுகள் அடிக்கடி மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்து மரங்கள் கருகுவது தொடர்கிறது.
இதனால் இவ்வொன்றியம் வேகமாக பசுமைதன்மையை இழந்து வருகிறது. வறட்சி காலங்களில் சில மீட்டர் ஆழத்தில் கிடைத்த தண்ணீர் தற்போது மழைக்காலங்களில் கூட கிடைப்பதில்லை. இதே நிலை நீடித்தால் விரைவில் இவ்வொன்றிய மக்கள் விவசாயத்தை மறந்து அப்பகுதி பாலைவனப் பகுதி போல் ஆகிவிடும் என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
இப்பகுதியை விவசாய அழிவிலிருந்து காக்க ஆக்கிரமிப்பு மேய்ச்சல் நிலங்களை கண்டறிந்து அவற்றை மீட்க வேண்டும், வரத்துக்கால்வாய், இணைப்பு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும்.
ஒன்றியம் முழுவதும் வனத்துறை, ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் கூடுதல் மரக்கன்றுகளை நடவு செய்து மீண்டும் பசுமை ஒன்றியமாக மாற்ற வேண்டும்.
இல்லை யென்றால் எஸ்.புதுார் பாலைவன ஒன்றியமாக மாறிப் போனாலும் வியப்பதற்கில்லை என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.