/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு தீ வைப்பு: பொருட்கள் எரிந்தது
/
மானாமதுரை அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு தீ வைப்பு: பொருட்கள் எரிந்தது
மானாமதுரை அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு தீ வைப்பு: பொருட்கள் எரிந்தது
மானாமதுரை அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு தீ வைப்பு: பொருட்கள் எரிந்தது
ADDED : செப் 12, 2025 04:19 AM

மானாமதுரை:மானாமதுரை அருகே பதினெட்டாங்கோட்டையில் வீடு, வெல்லம் தயாரிக்கும் கிரஷர் ஆலை, வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
மானாமதுரை அருகே உள்ள பதினெட்டாங்கோட்டையில் வேலாயுதம் என்பவர் இயற்கை விவசாயம் செய்வதோடு அங்கேயே வீடு கட்டி தங்கி வெல்லம் தயாரிக்கும் கிரஷர் கம்பெனி மற்றும் 10க்கும் மேற்பட்ட கறவை மாடுகள், 100க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தார். வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பதினெட்டாங்கோட்டை,இடைக்காட்டூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் உள்ளது.இதனை இப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து வருவது குறித்து 3 வருடங்களாக வேலாயுதம் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் புகார் கொடுத்ததை தொடர்ந்து தற்போது கோயில் நிலங்கள் கோர்ட் மூலம் மீட்கப்பட்டு வருகின்றன.
ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் இரவு வேலாயுதத்தின் வீடு மற்றும் கிரஷர் ஆலை, வைக்கோல் படப்பிற்கு தீ வைத்தனர்.இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும், 500க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகளும், கிரஷர் ஆலை பொருட்களும் முற்றிலும் எரிந்தது. கறவை மாடுகள் வயல்வெளியில் கட்டப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின.இது குறித்து வேலாயுதம் மானாமதுரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.