ADDED : மார் 24, 2025 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்து என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சகாயதைனேஸ் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ராம்குமார் முன்னிலை வகித்தனர்.
மாநில உயர்மட்டக்குழு செல்வம் துவக்கி வைத்தார்.
மாவட்ட உயர்மட்டக்குழு ராசா, சேசுராஜ், வனிதா, ஆரோக்கியராஜ், மலைராஜ், பாண்டியராஜன், அருள், கண்ணதாசன், தமிழரசன், லதா, கோவிந்தராஜ், ஜெய்சங்கர், ஜீவானந்தம், தங்கபாண்டியன், ஜெயபிரகாஷ், சிவா, மாரி, முத்துச்சாமி பங்கேற்றனர். மாநில உயர்மட்டக்குழு சேதுசெல்வம் நிறைவுரை ஆற்றினார்.