ADDED : மே 23, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகா கிராமங்களுக்கான வருவாய் துறையினரின் ஜமாபந்தி இன்று முதல் துவங்குகிறது.
வருவாய்த்துறை சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கான ஜமாபந்தி கணக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் இன்று துவங்குகிறது.
வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் உதவி ஆணையர்(ஆயம்) ரெங்கநாதன் தலைமையில் நடைபெறுகிறது.
இன்று திருக்கோஷ்டியூர் உள்வட்ட கிராமங்களுக்கும், மே 27ல் இளையாத்தங்குடி உள்வட்ட கிராமங்களுக்கும், மே 28ல் நாச்சியாபுரம் உள்வட்ட கிராமங்களுக்கும், மே29ல் நெற்குப்பை உள்வட்ட கிராமங்களுக்கும், மே 30ல் திருப்புத்துார் உள்வட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
காலை 10:00 மணி முதல் பொதுமக்கள் நேரில் மனு அளிக்கலாம்.