/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாலுகா அலுவலகங்களில் மே 23 முதல் ‛'ஜமாபந்தி'
/
தாலுகா அலுவலகங்களில் மே 23 முதல் ‛'ஜமாபந்தி'
ADDED : மே 09, 2025 01:44 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 1434 ம் பசலிக்கான வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்க்கும் 'ஜமாபந்தி கூட்டம்' மே 23 முதல் 30 வரை அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
காளையார்கோவில்: கலெக்டர் ஆஷா அஜித் தலைமை. மே 23 ல் நாட்டரசன்கோட்டை, மே 27 காளையார்கோவில், மே 28 மறவமங்கலம், மே 29 சிலுக்கப்பட்டி, மே 30 மல்லல் பிர்க்காவிற்குட்பட்ட கிராமங்கள்.
காரைக்குடி: தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் தலைமை. மே 23ல் சாக்கோட்டை, மே 27ல் கல்லல், மே 28 ல் பள்ளத்துார், மே 29ல் காரைக்குடி, மே 30 ல் மித்ராவயல் பிர்க்காவிற்குட்பட்ட கிராமங்கள்
இளையான்குடி: மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி தலைமை. மே 23 ல் தாயமங்கலம், மே 27 ல் இளையான்குடி, மே 28ல் திருவுடையார்புரம், மே 29ல் சாலைக்கிராமம், மே 30ல் சூராணம் பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமங்கள்.
திருப்புவனம்: கோட்டாட்சியர் விஜய குமார் தலைமை. மே 23ல் கொந்தகை, மே 27ல் திருப்புவனம், மே 28ல் திருப்பாச்சேத்தி பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமங்கள்.
மானாமதுரை: பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி தலைமை. மே 23 ல் செய்களத்துார், மே 27ல் முத்தனேந்தல், மே 28ல் மானாமதுரை பிர்க்காவிற்குட்பட்ட கிராமங்கள்.
திருப்புத்துார்: உதவி கமிஷனர் (ஆயம்) ஆர்.ரங்கநாதன் தலைமை. மே 23ல் திருக்கோஷ்டியூர், மே 27ல் இளையாத்தங்குடி, மே 28ல் நாச்சியாபுரம், மே 29ல் நெற்குப்பை, மே 30ல் திருப்புத்துார் பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமங்கள்.
சிவகங்கை: கலெக்டர் பி.ஏ., (நிலம்) ஆர்.கீர்த்தனா மணி தலைமை. மே 23 ல் சிவகங்கை, மே 27 ல் பெரியகோட்டை, மே 28 ல் ஒக்கூர், மே 29 ல் மதகுபட்டி, மே 30 ல் தமறாக்கி பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமங்கள்.
தேவகோட்டை : மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) பி.சிவக்குமார் தலைமை. மே 23ல் தேவகோட்டை, மே 27ல் கண்ணங்குடி, மே 28ல் கண்டதேவி, மே 29ல் புளியால், மே 30ல் சருகணி பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமங்கள்.
சிங்கம்புணரி: மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எம்.ஆனந்தி தலைமை.மே 23 ல் சிங்கம்புணரி, மே 27 ல் வாராப்பூர், மே 28 ல் எஸ்.எஸ்., கோட்டை பிர்க்காவிற்குட்பட்ட கிராமங்களில் ஜமாபந்தி கூட்டம் நடைபெறும்.

