ADDED : அக் 13, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முட்டாகட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா மனைவி சரசு 50. இவர் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 4:00 மணிக்கு அடையாளம் தெரியாத 2 பேர் கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்து சரசுவை மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கத்தோடை அறுத்து சென்றனர்.
சரசு காயமடைந்து சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.