/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி இணைப்பதிவாளர் தகவல்
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி இணைப்பதிவாளர் தகவல்
ADDED : மார் 24, 2025 05:46 AM
சிவகங்கை: கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு மற்றும் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வகுப்பு ஏப்.,15 முதல் துவக்கப்பட உள்ளதாக கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, இப்பயிற்சிகள் சேர்வதற்கான விண்ணப்பம் இன்று முதல் (மார்ச் 24) ஏப்., 13 வரை சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும்.
பயிற்சி காலம் 2 மாதம். இதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி.
பயிற்சி கட்டணம் ரூ.4550. பயிற்சியில் நகையின் தரம் அறியும் உபகரணம் வழங்கப்படும். 40 மணி நேர வகுப்பு, 60 மணி நேரம் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சி சான்றை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சிக்கு பின் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மேலும் விபரத்திற்கு 04575 - 243 995ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.