/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் ஆசிரியையிடம் நகை பறிப்பு * மானாமதுரையில் துணிகரம்
/
மானாமதுரையில் ஆசிரியையிடம் நகை பறிப்பு * மானாமதுரையில் துணிகரம்
மானாமதுரையில் ஆசிரியையிடம் நகை பறிப்பு * மானாமதுரையில் துணிகரம்
மானாமதுரையில் ஆசிரியையிடம் நகை பறிப்பு * மானாமதுரையில் துணிகரம்
ADDED : அக் 30, 2025 03:37 AM
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் நகரில் வசித்து வருபவர் சுதா. சுந்தரநடப்பு அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். மானாமதுரையில் இருந்து பள்ளிக்கு டூவீலரில் சென்று வீடு திரும்புவது வழக்கம். நேற்று பள்ளி முடிந்து மானாமதுரையில் உள்ள வீட்டுக்கு டூவீலரில் வந்தார்.
மாலை 4:30 மணிக்கு செய்களத்துார் விலக்கு ரோடு அருகே வந்த போது இவரது டூவீலருக்கு முன்னும், பின்னும் 2 டூவீலர்களில் வந்த 5 பேர் ஆசிரியையை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்து தப்பினர்.
கீழே விழுந்ததில் சுதா காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மானாமதுரை சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார்.
மானாமதுரையில் சிவகங்கை ரோடு மற்றும் மதுரை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேவர் குருபூஜையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனினும் நேற்று ஆசிரியையை கீழே தள்ளிவிட்டு நகையை பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.