/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவையான உரம் இருக்கிறது அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
/
தேவையான உரம் இருக்கிறது அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
தேவையான உரம் இருக்கிறது அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
தேவையான உரம் இருக்கிறது அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
ADDED : அக் 30, 2025 03:35 AM
சிவகங்கை:  தேவையான அளவு உரம் கையிருப்பு உள்ளது என சிவகங்கையில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: முன்னோர்கள் கடைபிடித்து வந்த கலைகளை மாணவர்கள் திறமைகளின் வழியாக கொண்டுவர  கலை திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. மாநில அளவில் நடக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கு சிவகங்கை மாவட்டம் சார்பில் 1000 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குழப்பங்களை ஏற்படுத்தும். போதிய அவகாசம், முறையான வாய்ப்பு வழங்கி செய்ய வேண்டும். அவசரகதியில் செய்தால் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. தேவையான அளவு உரம் கையிருப்பு உள்ளது. எந்தபகுதியில் தட்டுப்பாடு உள்ளது என்று கூறுங்கள் அந்தபகுதியில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.