UPDATED : செப் 15, 2026 04:59 PM
ADDED : செப் 15, 2026 04:41 PM
சிவகங்கை:சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் செப்.18 காலை 10:30 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித் தேர்வுக்கான இலவசப்பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முாகமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோர்க்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது.
