/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷனில் பொங்கல் தொகுப்பு பெற ஜன.,25 கால அவகாசம் இணை பதிவாளர் தகவல்
/
ரேஷனில் பொங்கல் தொகுப்பு பெற ஜன.,25 கால அவகாசம் இணை பதிவாளர் தகவல்
ரேஷனில் பொங்கல் தொகுப்பு பெற ஜன.,25 கால அவகாசம் இணை பதிவாளர் தகவல்
ரேஷனில் பொங்கல் தொகுப்பு பெற ஜன.,25 கால அவகாசம் இணை பதிவாளர் தகவல்
ADDED : ஜன 20, 2025 05:20 AM
சிவகங்கை: ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பினை கார்டுதாரர்கள் ஜன.,25 வரை பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, மாவட்ட அளவில் 829 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 91 கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் அரிசி வாங்குவோர், அகதிகள் முகாமில் வசிப்போர் என 4 லட்சத்து 17 ஆயிரத்து 664 கார்டுதாரர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு பொங்கல் தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 6 அடி உயர கரும்பு ஜன., 18 வரை வழங்கினர். அதன்படி இம்மாவட்டத்திற்கு அரிசி, சர்க்கரை என 4 லட்சத்து 16 ஆயிரத்து 476 கிலோ ஒதுக்கப்பட்டது.
அதில், 3 லட்சத்து 58 ஆயிரத்து 775 கிலோ கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இன்னும் ரேஷன் கடைகளில் 57 ஆயிரத்து 701 கிலோ பச்சரிசி, சர்க்கரை இருப்பில் உள்ளது.
ஜன., 18 வரை 86.46 சதவீதம் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்துள்ளனர்.
எஞ்சிய கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்க செய்யும் நோக்கில், பொங்கல் தொகுப்பு பெறுவதற்காக கால அவகாசம் ஜன.,25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என்றார்.
துணை பதிவாளர் (பொது வினியோகம்) பாபு உடனிருந்தார்.