ADDED : பிப் 03, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரி இயற்கை கழகம் மற்றும் மதுரை, கிரீன் தான் அமைப்பு இணைந்து மரங்களை அறியும் பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
துணை முதல்வர் ஜஹாங்கிர் வரவேற்றார். முதல்வர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார். பேராசிரியர் ஸ்டீபன், மதுரை கிரீன் தான் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம், பேராசிரியர் எட்வின் ராஜா குமார் ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு மரங்களின் இயற்கை, மருத்துவம் மற்றும் பொருளாதார வளங்கள் குறித்து விளக்கினர்.
மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இயற்கை கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் நன்றி கூறினார்.

