தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஒளிரும் மின்விளக்குகளால் வெடிக்கும் ‘‛ஜம்பர்கள்’: மின்தடையால் மக்கள் அவதி

ஒளிரும் மின்விளக்குகளால் வெடிக்கும் ‘‛ஜம்பர்கள்’: மின்தடையால் மக்கள் அவதி

ஒளிரும் மின்விளக்குகளால் வெடிக்கும் ‘‛ஜம்பர்கள்’: மின்தடையால் மக்கள் அவதி


UPDATED : நவ 04, 2026 11:11 AM

ADDED : நவ 04, 2026 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:11 AM ADDED : நவ 04, 2026 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: தீபாவளிக்காக கடைகளில் பகல் போல் ஒளிரும் மின்விளக்குகளால் மின்தேவை அதிகரித்து தாக்கு பிடிக்க முடியாமல் ‘ஜம்பர்கள்’ வெடிப்பதன் மூலம் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் கவர்ச்சியான சலுகைகளுடன் கூடிய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தங்கள் கடைகளை மக்களுக்கு விளம்பர போர்டு மூலம் வெளிக்காட்டும் நோக்கில், இரவில் ‘பகல் போல் தெரியும் விதமாக ஒளிரும் மின்விளக்குகளை’ பொருத்தியுள்ளனர்.

வழக்கத்திற்கு மாறாக தீபாவளி நேரத்தில் மின்பயன்பாடு அதிகரித்து விட்டது. மின் தேவையும் அதிகரித்துவிட்டதால், மின் கம்பிகளை இணைக்கும் ‘ஜம்பர்’ அடிக்கடி வெடித்து விடுகின்றன.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சிவகங்கையில் இரவு, பகல் பாராமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக மாலை முதல் இரவு 11:00 மணிக்குள் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

வியாபாரிகள் தீபாவளிக்காக பொருட்களை விற்பனை செய்ய முடியாமலும், பொதுமக்களும் மாலை நேரத்தில் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே தீபாவளி விழா காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வாரியம் உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தடையில்லா மின்சார முயற்சி



மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, வழக்கத்தை விட அதிக மின்பயன்பாடு உள்ளதால், ‘ஜம்பர்’ வெடித்து விடுகிறது. உடனுக்குடன் அவற்றை சரி செய்து தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம். நகரில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படாத வகையில் அதிக சிரத்தை எடுத்து மின் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us