sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டேராடூன் ராணுவக்கல்லுாரியில் 8ம் வகுப்பு சேர ஜூன் 1 தேர்வு

/

டேராடூன் ராணுவக்கல்லுாரியில் 8ம் வகுப்பு சேர ஜூன் 1 தேர்வு

டேராடூன் ராணுவக்கல்லுாரியில் 8ம் வகுப்பு சேர ஜூன் 1 தேர்வு

டேராடூன் ராணுவக்கல்லுாரியில் 8ம் வகுப்பு சேர ஜூன் 1 தேர்வு


ADDED : மார் 31, 2025 01:29 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லுாரியில் ஜன., 2026 பருவத்துக்கான 8ம் வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு ஜூன் 1 ல் தேர்வு நடக்கிறது.

எழுத்து தேர்வு ஆங்கிலம், கணக்கு, பொது அறிவியலில் இருந்து கேட்கப்படும். கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத்தாளுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் விடையளிக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்விற்கான விண்ணப்பப்படிவம் தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்வு வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லுாரி, கர்ஹி கான்ட், டேராடூன், உத்தராகண்ட் -- 248 003 என்ற முகவரிக்கு வரைவோலை அனுப்பி அல்லது www.rimc.gov.in என்ற இணையதளம் மூலம் பெறலாம்.

பொதுப்பிரிவினர் ரூ.600 மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர் ஜாதிச்சான்றுடன் ரூ.555க்கான வரைவோலையை அனுப்பி விண்ணப்பப் படிவம் பெறலாம்.

தவறான அல்லது முழுமையடையாத முகவரி மற்றும் அஞ்சல் துறையின் தாமதம் அல்லது இழப்புக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக்கல்லுாரி பொறுப்பேற்காது.

விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 2013 ஜனவரி 2க்கு முன்பும் 2014 ஜூலை 1க்கு பின்பும் பிறந்திருக்க கூடாது.






      Dinamalar
      Follow us