/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் 2ம் நிலை பேரூராட்சி விரைவில் செயல் அலுவலர் நியமனம்
/
காளையார்கோவில் 2ம் நிலை பேரூராட்சி விரைவில் செயல் அலுவலர் நியமனம்
காளையார்கோவில் 2ம் நிலை பேரூராட்சி விரைவில் செயல் அலுவலர் நியமனம்
காளையார்கோவில் 2ம் நிலை பேரூராட்சி விரைவில் செயல் அலுவலர் நியமனம்
ADDED : பிப் 13, 2025 06:49 AM
சிவகங்கை: பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காளையார்கோவிலுக்கு விரைவில் செயல் அலுவலர் தலைமையில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் காளையார்கோவில் ஊராட்சி செயல்பட்டு வந்தது. இந்த ஊராட்சியின் பரப்பளவு 12.5 சதுர கிலோ மீட்டராக இருந்து வருகிறது. மக்கள் தொகை 14,490 ஆக உள்ளன. இந்த ஊராட்சியின் ஆண்டு வருமானம் ரூ.1.5 கோடி. தொடர்ந்து காளையார்கோவில் தாலுகாவாக பிரிக்கப்பட்ட நிலையில், இந்த ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து காளையார்கோவிலில், அதிகளவில் வீட்டு மனைகள் விற்பனை செய்வதன் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் இங்கு வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். நாளுக்கு நாள் இங்கு வீட்டு மனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. இதனால் பிளான் அப்ரூவல் மூலம் ஊராட்சிக்கு வருவாயும் பெருகி வருகின்றன.
எனவே காளையார்கோவில் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தன. பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, காளையார்கோவில் ஊராட்சியை, 2ம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கிராம ஊராட்சியில் இருந்த போது அதே 12.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு, 12 வார்டுகளுக்கு உட்பட்ட தெருக்களை கொண்டு பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சி தரம் உயர்த்துவதற்காக அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
விரைவில் செயல் அலுவலர் நியமனம்
காளையார்கோவில் 2 ம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், இங்கு செயல் அலுவலர் தலைமையில் இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், மேற்பார்வையாளர், மின், குடிநீர் வினியோக பணியாளர், துப்புரவு ஊழியர்கள், தெருவிளக்கு பராமரிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, பேரூராட்சியாக செயல்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.