/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குன்றக்குடியில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
/
குன்றக்குடியில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
ADDED : நவ 03, 2024 05:39 AM

காரைக்குடி: குன்றக்குடியில் கந்த சஷ்டி விழா தொடக்கத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் நடந்தது. விழாவை முன்னிட்டு முத்துகந்தர் மலையிலிருந்து இறங்கி திருநாள் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.
தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு அறுமுகச் செவ்வேல் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ.7 ஆம் தேதி மதியம் 3.15 மணிக்கு சுவாமி அம்மையிடம் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மாலை 4:05 மணிக்கு வெள்ளிரதத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை 5:30 முதல் 6:30 மணிக்குள் சூரனை தடிதலும் ஆட்கொள்ளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.