/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் கந்த சஷ்டி விழா நவ., 7 ல் சூரசம்ஹாரம்
/
திருப்புத்துாரில் கந்த சஷ்டி விழா நவ., 7 ல் சூரசம்ஹாரம்
திருப்புத்துாரில் கந்த சஷ்டி விழா நவ., 7 ல் சூரசம்ஹாரம்
திருப்புத்துாரில் கந்த சஷ்டி விழா நவ., 7 ல் சூரசம்ஹாரம்
ADDED : நவ 05, 2024 05:19 AM

திருப்புத்துார்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நவ.,7 ல் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் முருகன் வள்ளி தெய்வானையுடன் வடக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இங்கு நவ.,2ல் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்து கந்தசஷ்டி விழா துவங்கியது.
தினமும் மூலவருக்கு மாலையில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மேலும் உற்ஸவர் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளி பாஸ்கர் குருக்கள் சிறப்பு பூஜை செய்தார். விழாவின் 6 ம் நாளான நவ.,7 காலை 10:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகமும், தீபாராதனையும் நடைபெறும்.
மாலை 4:30 மணிக்கு திருநாள் மண்டபத்தில் உற்ஸவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்து கோயிலிருந்து புறப்பாடு ஆகும்.
பின்னர் கீழரத வீதியில் எழுந்தருளி முருகன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.
பின்னர் ஏழாம் நாள் காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் சுப்பிரமணியருக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.

