/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டவராயன்பட்டி கண்மாயில் நீர் பெருகியும் சாகுபடியில் ஆர்வமில்லாத விவசாயிகள்
/
கண்டவராயன்பட்டி கண்மாயில் நீர் பெருகியும் சாகுபடியில் ஆர்வமில்லாத விவசாயிகள்
கண்டவராயன்பட்டி கண்மாயில் நீர் பெருகியும் சாகுபடியில் ஆர்வமில்லாத விவசாயிகள்
கண்டவராயன்பட்டி கண்மாயில் நீர் பெருகியும் சாகுபடியில் ஆர்வமில்லாத விவசாயிகள்
ADDED : நவ 22, 2024 04:26 AM

கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் அருகே கண்டவராயன்பட்டியில் கண்மாய் பெருகியும் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. வயல்களில் பெருகியுள்ள சீமைக்கருவை மரங்களும் விவசாயத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது.
திருப்புத்துார் வட்டாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடந்தது. தொடர்ந்து ஆறுகளில் நீர் வரத்தின்மை, பருவ மழை பொய்த்ததால் கண்மாய்களில் நீர் வறண்டு நெல்சாகுபடி கேள்விக்குறியானது.
தற்போது பல கண்மாய்களில் நீர் பெருகியும் அதிகபட்சமாக 6 ஆயிரம் ஏக்கர் அளவிலேயே நெல் சாகுபடி நடந்துள்ளது. நெல் சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் வெகுவாக குறைந்து வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் வயல்களில் சீமைக்கருவை மரங்கள் ஆக்கிரமிப்பும் ஒன்றாகும்.
திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டி பிளவக்கண்மாயில் நீர் பெருகி மறுகால் செல்கிறது. ஆனால் இக்கண்மாய் ஆயக்கட்டில் 10 சதவீதம் கூட நெல்சாகுபடி நடைபெறவில்லை. 200 ஏக்கருக்கும் அதிகமான வயல்பரப்பில் பரவலாக சீமைக்கருவை மரங்கள் காணப்படுகின்றன.
விவசாயிகள் கூறுகையில், சாகுபடி செய்ய நினைத்தாலும் பல வயல்களில் சீமைக்கருவை மரங்கள் உள்ளதால் நீர் பாய்ச்சுதல், வரப்பு பராமரிப்பு என்று எதுவுமே எளிதாக செய்ய முடியாது. இதனால் நன்செய் நிலத்தில் சீமைக்கருவை வளர்ப்பை அரசே தடை செய்ய வேண்டும். அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கின்றனர்.
இதே நிலை பல கிராமங்களில் காணப்படுகிறது. தற்போது அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் வயல்களில் உள்ள முட்புதர்களை அகற்றும் திட்டம் உள்ளது. திருப்புத்தூர் ஒன்றியத்தில் 8 ஊராட்சிகளில் 100 ஏக்கர் வயல்கள் இவ்வாறு முட்மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. அது போல அனைத்து பகுதிகளிலும் அரசு நடைமுறைப்படுத்த விவசாயிகள் கோரியுள்ளனர்.