ADDED : ஆக 11, 2025 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீட கோயிலில் ஆடி திருவிழா நடந்தது. பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முதல் நாள் பெண்கள் அம்மனுக்கு வேள்வி பூஜை செய்தனர். பெண்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து நேர்த்தி செலுத்தினர்.
நேற்று காலை ஆயிரக்கணக்கான பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர்.
பால்குடம் எடுத்து வந்த பெண்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.