/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் கஞ்சி கலயம் விற்பனை அதிகரிப்பு
/
மானாமதுரையில் கஞ்சி கலயம் விற்பனை அதிகரிப்பு
ADDED : ஜூலை 18, 2025 11:53 PM
மானாமதுரை: மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆடி பிறப்பை முன்னிட்டு கஞ்சி கலயங்கள், முளைப்பாரி ஓடுகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.
ஆடியில் அம்மன் கோவில்களில் கஞ்சி கலய ஊர்வலம்,மற்றும் முளைப்பாரி எடுத்தல் போன்ற விழாக்கள் நடைபெறும்.இதற்காக மானாமதுரையில் கஞ்சி கலயங்கள்,மற்றும் முளைப்பாரி ஓடுகள் தயாரிக்கும் பணி நடந்தது. தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் கஞ்சி கலய ஊர்வலங்களும் நல்ல மழை பொழிய வேண்டி முளைப்பாரி திருவிழா நடைபெறும்.இதற்காக மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் கஞ்சி கலயம், முளைப்பாரி ஓடுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை,விருதுநகர்,துாத்துக்குடி,புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.