ADDED : ஜூன் 25, 2025 08:38 AM

காரைக்குடி : காரைக்குடியில் கண்ணதாசனின் 99 வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. கண்ணதாசன் மண்டபத்தில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாங்குடி எம்.எல்.ஏ., சப் கலெக்டர் ஆயுஸ் வெங்கட், மாநகராட்சி மேயர் முத்துத்துரை, த.வெ.க., கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபு, தாசில்தார் ராஜா, கண்ணதாசன் மகள் விசாலாட்சி, கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் நாகப்பன், டாக்டர் சுரேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்புத்துார்: கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான சிறுகூடல்பட்டியில் நிகழ்ச்சி நடந்தது.
மலையரசியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நடந்த விழாவில் திருப்புத்துார் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார்.
கட்டுரைத் தொகுப்பு மலரை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார். மலரை கந்தப்பழம் மற்றும் ராமனாதன் பெற்றனர். மூவருக்கு கண்ணதாசன் விருது, வளர்தமிழ் நுாலகத்திற்கான நுால்களை டாக்டர் செந்தமிழ் பாவைக்கும் அமைச்சர் வழங்கினார்.
பழ.காந்தி,பரம்பு நடராஜன் பேசினர். ராமநாதபுரம் தமிழ்சங்கம் சந்திரசேகர் தலைமையில் கவியரங்கம் நடந்தது.
பாரதி இலக்கியக் கழக ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன், லெனின் கம்யூ. மாநில பொதுச்செயலர் ஸ்டாலின், கணேசன், முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, பொருளாளர் குணாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.