/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முளைக்காத தரச்சான்று பெற்ற நெல் கண்ணங்குடி விவசாயிகள் ஏமாற்றம்
/
முளைக்காத தரச்சான்று பெற்ற நெல் கண்ணங்குடி விவசாயிகள் ஏமாற்றம்
முளைக்காத தரச்சான்று பெற்ற நெல் கண்ணங்குடி விவசாயிகள் ஏமாற்றம்
முளைக்காத தரச்சான்று பெற்ற நெல் கண்ணங்குடி விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : செப் 20, 2025 04:00 AM
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஒன்றியத்தில் விவசாயிகள் விதைத்த தரச்சான்று பெற்ற அரசு விதை நெல் முளைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
200 ஏக்கர் நிலத்தில் நெல்சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் இழப்பீடு கோரியுள்ளனர்.
கண்ணங்குடி வட்டார விவசாயிகள் நெல்சாகுபடியில் நேரடி நெல் விதைப்பை கடை பிடிக்கின்றனர்.
கேசனி, வடகீழ்குடி,களப்பம்,நாரணமங்கலம்,குடிக்காடு, சிறுவாச்சி உள்ளிட்ட கிராமங்களில் கண்ணங்குடி வேளாண் விரிவாக்க மையத்தில் பி.பி.டி.5204 (டீலக்ஸ் பொன்னி) என்ற தரச்சான்று பெற்ற நெல்விதைகளை விவசாயிகள் வாங்கினர்.
50 கிலோ மூடை தலா ரூ.1700 வீதம் வாங்கி விதைத்தனர். மூன்று முறை மழை பெய்தும், இருபது நாட்களுக்கு பின்னும் இந்த நெல் விதைத்த வயல்களில் நாற்றுக்கள் முளைவிடவில்லை.
இது போன்று 200 ஏக்கருக்கும் அதிகமான வயல்களில் இந்த விதைகள் முளைவிடவில்லை. வேறு ஊர்களில் தனியார் நிறுவனங்களில் வாங்கி விதைத்த நெல்விதைகள் முளைத்துள்ளன.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தில் முறையிட்டும் சரியான பதில் இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுற்றியுள்ள வயல்களில் பயிர்கள் வளரத்துவங்கிய நிலையில், தங்கள் வயல்களில் டிராக்டர் மூலம் உழவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் கூறுகையில், இங்குள்ள மண் வளத்திற்கு டீலக்ஸ் பொன்னி ரக நெல் நன்கு வளர்ந்து விளைச்சல் கிடைக்கும். இதனால் பரிசோதிக்கப்பட்ட அரசு நெல்லை விதைத்தோம்.
அனைத்தும் வீணாகி விட்டது. விதைநெல் விலை, உழவு கூலி, விதைப்பு கூலி என்று செலவானதுதான் மிச்சம். அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.' என்றார்.
வேளாண் அதிகாரிகள் கூறுகையில், விதைகள் முளைக்காததற்கு போதிய மழை இல்லாததே காரணம். இந்த விதைகள் கண்ணங்குடி பகுதியில் உள்ள பண்ணையில் உற்பத்தியானது.
அனைத்து தரச்சோதனை நடந்து தரச்சான்று பெற்றது.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.' என்றனர்.