/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் காரைக்குடி போலீசார்
/
பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் காரைக்குடி போலீசார்
பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் காரைக்குடி போலீசார்
பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் காரைக்குடி போலீசார்
ADDED : மே 18, 2025 12:23 AM
காரைக்குடி: காரைக்குடி உட்பட சிவகங்கை மாவட்டத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்து 3 மாதமாகியும் பணியிட மாறுதல் குறித்த அறிவிப்பு வராததால் போலீசார் கவலையில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் போலீசாருக்கான பணியிட மாறுதல், ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும், போலீசார் முதல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வரை பணியிட மாற்றம் செய்யப்படும். இவ்வாண்டு தொடக்கத்தில் பணியிட மாறுதலுக்கு அறிவிப்பு வெளியானது.
சிவகங்கை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பணியிட மாறுதலுக்கு, கடந்த ஜனவரியில் விண்ணப்பித்த நிலையில் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
பணியிட மாறுதல் வரும் என்ற எதிர்பார்ப்பில் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு குடும்ப வேலைகளை செய்ய முடியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
போலீசார் கூறுகையில் :
ஆண்டுதோறும் மார்ச் இறுதிக்குள் பணியிட மாறுதல் உத்தரவு வந்து விடும். பணியிட மாறுதல் கிடைத்தால் பணி வழங்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருவது குறித்து திட்டமிடல், தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து திட்டமிட முடியும்.
மே மாதம் தொடங்கியும் இதுவரை எவ்வித உத்தரவும் வரவில்லை. பள்ளி தேர்வுகளுக்கு முன்னரே பணியிட மாற்றம் குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் வரவில்லை. விரைவில் பணியிட மாற்றத்தை அறிவிக்க வேண்டும் என்றனர்.