/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி வளாகத்திற்குள் வாலிபர் கத்தியுடன் சென்றது எப்படி கார்த்தி எம்.பி., கேள்வி
/
பள்ளி வளாகத்திற்குள் வாலிபர் கத்தியுடன் சென்றது எப்படி கார்த்தி எம்.பி., கேள்வி
பள்ளி வளாகத்திற்குள் வாலிபர் கத்தியுடன் சென்றது எப்படி கார்த்தி எம்.பி., கேள்வி
பள்ளி வளாகத்திற்குள் வாலிபர் கத்தியுடன் சென்றது எப்படி கார்த்தி எம்.பி., கேள்வி
ADDED : நவ 23, 2024 02:31 AM
சிவகங்கை,:ஆசிரியை கொல்லப்பட்டது தனிப்பட்ட விரோதம் என்றாலும், பள்ளி வளாகத்திற்குள் வாலிபர் கத்தியுடன் சென்றது எப்படி என சிவகங்கையில் கார்த்தி எம்.பி., கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது: அதானி குழும தலைவர், இயக்குனர்கள் மீது அமெரிக்காவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இக்குழுமத்திற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு இது பற்றி பேசவில்லை. அமெரிக்கா போன்று, இந்தியாவில் 'செபி'-யும் விசாரணை நடத்த வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் அதானி குழுமத்தினரை சந்தித்ததை தவறு என நான் சொல்லமாட்டேன்.
இரு தனிநபருக்குள் நடக்கும் சம்பவத்தால் கொலை நடந்தால் போலீசால் தடுக்க முடியாது. ஆனால் அரசு பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை கொலை, நீதிமன்ற வளாகம் அருகே வழக்கறிஞர் மீது தாக்குதல் நடந்தது எப்படி. பள்ளி வளாகத்திற்குள் ஆயுதம் எப்படி சென்றது. இதற்கு அரசும், போலீஸ்துறையும் தான் விளக்கம் தர வேண்டும்.
திருமாவளவன் முதல்வராக வர வேண்டும் என்பது யதார்த்தமான விஷயம். காங்., 1967 ல் இருந்து தமிழகத்தில் ஆட்சியில் இல்லை.
காரைக்குடி அருகே செட்டிநாட்டில் விமான தளம் உள்ளது. அங்கு வர்த்தக ரீதியாக விமானநிலையம் வர வாய்ப்பில்லை. சிவகங்கையில் மகளிர் போலீஸ் பயிற்சி மையமோ, அதை வேலுநாச்சியார் பெயரில் துவக்கவோ முடியாது என அரசு தெரிவித்துவிட்டது. இது குறித்து அரசு மற்றும் உள்துறை செயலரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளேன், என்றார்.

