/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குன்றக்குடியில் கார்த்திகை படி பூஜை
/
குன்றக்குடியில் கார்த்திகை படி பூஜை
ADDED : ஆக 16, 2025 11:49 PM
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு நேற்று படிபூஜை நடந்தது.
ஆடி மாதத்தின் முக்கிய நாளாக ஆடி கார்த்திகை கடைபிடிக்கப்படுகிறது. ஆடி கார்த்திகை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பல்வேறு தோஷங்களும் நிவர்த்தி யாகும் என்பது ஐதீகம். நேற்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு சண்முகநாதப் பெருமானுக்கு காலையில் சந்தன திருமுழுக்காட்டு நிகழ்ச்சி, அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து மாலையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் படிபூஜை பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. குன்றக்குடி அடிவாரத்தில் படி பூஜை தொடங்கி படி முழவதும் சூடம் ஏற்றி பூக்கள் வைத்தும் பூஜை நடந்தது. படி பூஜையின் போது திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

