/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கருப்பூர்-எஸ்.எஸ்.கோட்டை ரோடு புதுப்பிக்கும் பணி தாமதம்
/
கருப்பூர்-எஸ்.எஸ்.கோட்டை ரோடு புதுப்பிக்கும் பணி தாமதம்
கருப்பூர்-எஸ்.எஸ்.கோட்டை ரோடு புதுப்பிக்கும் பணி தாமதம்
கருப்பூர்-எஸ்.எஸ்.கோட்டை ரோடு புதுப்பிக்கும் பணி தாமதம்
ADDED : செப் 09, 2025 04:12 AM
திருப்புத்துார்: திருப்புத்துார்--மேலுார் ரோட்டில் பறவைகள் சரணாலயம் அருகில் விடுபட்ட பகுதிக்கான சாலைப் பணிகளை துவக்க கிரா மத்தினர் கோரியுள்ளனர்.
திருப்புத்துாரிலிருந்து மேலுாருக்கு செல்லும் நெடுஞ்சாலை 3 ஆண்டு களுக்கு முன்பாக சென்னை-கன்னியாகுமரி தொழிற்வடச்சாலை திட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்டது. அதில் கருப்பூரிலிருந்து எஸ்.எஸ்.கோட்டை வரை 4 கி.மீ. வரை சாலைப்பணிகள் நடைபெறவில்லை. அப்பகுதியில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் இருந்ததால் வனத்துறை அனுமதி பெறுவதற்காக பணிகள் தாமதமானது.
கடந்த ஆண்டில் வனத்துறை அனுமதி அளித்தும் இதுவரை பணிகள் நடைபெறவில்லை. இதனால் அப்பகுதியினர் விரைவாக ரோடு பணிகளை பூர்த்தி செய்ய கோரியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'தற்போது நிதி அனுமதியாகி டெண்டர் பணிகள் நிறைவடைந்து விட்டன. விரைவில் பணிகள் துவங்கும்' என்று தெரி வித்துள்ளனர்.