/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டிக்குளம் ராமலிங்க சுவாமி கோயில் தேரோட்டம்
/
கட்டிக்குளம் ராமலிங்க சுவாமி கோயில் தேரோட்டம்
ADDED : ஏப் 12, 2025 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் உள்ள சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி கோயில் பங்குனி உற்ஸவ விழா தேரோட்டம் நடந்தது.
இங்கு, மார்ச் 25ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். நேற்று மாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி, நிலையை அடைந்தது. இன்று ராமலிங்க சுவாமி குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் நீராடும் நிகழ்ச்சி நடைபெறும். ஏப்., 13 தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும்.

