ADDED : நவ 28, 2025 08:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: கார்த்திகையை முன்னிட்டு காரைக்குடியில் இருந்து சுவாமி மலைக்கு பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர். -
காரைக்குடியில் இருந்து ஆண்டுதோறும் கார்த்திகைக்கு நகரத்தார் சுவாமிமலை காவடி ஏந்தி பாதாயாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகைக்காக நா. புதூர் நாகநாத சுவாமி கோயிலில் விநாயகர் பானை வைத்து காவடி கட்டுதல் நிகழ்ச்சியும், வேல் பூஜையும் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று காலை காவடிகள் நகர்வலம் வந்து கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் காவடிகளை வைத்து வேல் பூஜை செய்தனர். மாலையில் அங்கிருந்து காவடிகள் ஏந்தி பக்தர்கள் சுவாமி மலை நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டனர்.

