நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார்: எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நவ.26ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு கோயில் விமானத்தில் புனித நீர் ஊற்றினர். அதனை தொடர்ந்து பத்ரகாளியம்மன், சின்னம்மாள், ஆட்கொண்டநாதர், ஆனைவிழிக்கருப்பர், சின்னக்கருப்பர், ஆண்டிச்சுவாமி போன்ற பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிேஷகம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

