/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அகழாய்வு நிறுத்தம்: வரலாற்று ஆர்வலர்கள் அதிர்ச்சி
/
கீழடி அகழாய்வு நிறுத்தம்: வரலாற்று ஆர்வலர்கள் அதிர்ச்சி
கீழடி அகழாய்வு நிறுத்தம்: வரலாற்று ஆர்வலர்கள் அதிர்ச்சி
கீழடி அகழாய்வு நிறுத்தம்: வரலாற்று ஆர்வலர்கள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 31, 2025 10:47 PM

கீழடி; கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட அகழாய்வு சத்தமின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
வைகை நதி கரை நாகரீகம் குறித்து மத்திய தொல்லியல் கண்காணிப்பளாராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன், தொல்லியல் ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோரது தலைமையில் 2014ம் ஆண்டு கீழடியில் அகழாய்வு தொடங்கியது.
இதில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் நதிக்கரையில் வாழ்ந்த மக்கள் பற்றிய ஆதாரங்கள், வாழ்விடங்கள், வேளாண் கருவிகள், நெசவு தொழில், வணிகம் ஆகியவற்றிற்கான ஆதாரம் கண்டறியப்பட்டன.
2ம் கட்ட அகழாய்வையும் நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் வேறு பணிக்கு மாற்றப்பட்டார். 3ம் கட்ட அகழாய்வு ஸ்ரீராமன் என்பவர் தலைமையில் நடந்தது. அதன் பின் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை நிறுத்தி விட்டது.
தமிழக தொல்லியல் துறை அடுத்தடுத்த கட்டங்களாக அகழாய்வை நடத்தி வந்தது. கடந்தாண்டு பத்தாம் கட்ட அகழாய்வு ஜூலையில் தொடங்கி ஆகஸ்ட், நவம்பருடன் நிறுத்தப்பட்டது.
இந்தாண்டு மார்ச் வரை நடைபெறும் என தொல்லியல் துறை தெரிவித்தது. ஆனால் பணிகள் நடைபெறவே இல்லை.
இதனிடையே கடந்தாண்டு கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் ஆகியோர் பயிற்சிக்காக ஸ்பெயின் சென்று வந்தனர். இந்தாண்டும் தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் இருவரும் இத்தாலி நாட்டிற்கு ஒரு மாத ஆய்விற்காக சென்றுள்ளனர்.
11ம் கட்ட அகழாய்விற்கு ஆணையர் சிவானந்தம் மத்திய தொல்லியல் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும், 10ம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கை அனுப்பிய பின்னால் தான் 11ம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும், இதுவரை அறிக்கை அனுப்பாததால், அகழாய்விற்கு விண்ணப்பிக்கவே இல்லை. இனி அனுமதி கிடைத்தாலும் இரண்டு மாதத்திற்கு அகழாய்வு நடக்காது. எனவே இனி 2026ல் தான் அகழாய்வு தொடங்கும்.