ADDED : நவ 28, 2024 05:28 AM

கீழடி: கீழடி 10ம் கட்ட அகழாய்வு பணி தொடர் மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பாக பத்தாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு சிவப்பு நிற கலைநயம் மிக்க பானைகள், தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய், சுடுமண் குழாய், தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு, மீன் உருவ பானை ஓடு என 100க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கீழடியில் மழை பெய்து வருவதால் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அகழாய்வு இனி டிசம்பரில் தான் தொடங்கும்.
அகழாய்வு குழிகள் அனைத்தும் தார்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து தொல்லியல் துறை ஆவணப்படுத்தி விட்டதால், இனி அகழாய்வின் போது எடுக்கப்படும் பொருட்கள் மட்டுமே ஆவணப்படுத்த வேண்டியுள்ளது.