/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அருங்காட்சியகம் தனித்துவமானது அமெரிக்க எழுத்தாளர் கருத்து
/
கீழடி அருங்காட்சியகம் தனித்துவமானது அமெரிக்க எழுத்தாளர் கருத்து
கீழடி அருங்காட்சியகம் தனித்துவமானது அமெரிக்க எழுத்தாளர் கருத்து
கீழடி அருங்காட்சியகம் தனித்துவமானது அமெரிக்க எழுத்தாளர் கருத்து
ADDED : டிச 12, 2025 04:32 AM

கீழடி: ''கீழடி அருங்காட்சியகம் தனித்துவமானது. பழம்பெருமையை பறைசாற்றுகிறது ''என அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் எழுத்தாளர் மைக்கேல் ராஸ் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா அருகில் வசிப்பவர் மைக்கேல் ராஸ் 77. மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் அமெரிக்க பத்திரிக்கைகளில் அறிவியல் கண்டு பிடிப்பு குறித்து எழுதி வருகிறார். கீழடி அகழாய்வு மற்றும் அருங்காட்சியகம் குறித்து கேள்விப்பட்டவர் ஒரு மாத பயணமாக இந்தியா வந்துள்ளார். கேரள மாநிலத்தில் பயணத்தை முடித்து விட்டு மதுரை வந்த அவர் மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் முடித்து கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
மைக்கேல் ராஸ் கூறியதாவது:
எங்கள் ஊரின் அருகில் சான் டியாகோ, சான் பிரான்சிஸ்கோ என இன்னும் பல அருங்காட்சியகங்கள் உள்ளது. அதில் உள்ள பொருட்களை பார்வையிட்டு தொடர்ச்சியாக எழுதி வந்தேன். கீழடி பற்றி கேள்விப்பட்டு இதனை காண இந்தியா வந்தேன். கீழடி அருங்காட்சியகம் உலகில் உள்ள மற்ற அருங்காட்சியகங்களை விட தனித்துவமானது. பொருட்களை காட்சிப்படுத்திய விதம், அவற்றின் விளக்கம், பொருட்களின் பாதுகாப்பு அம்சம், கட்டட தொகுதிகளின் அமைப்பு, சுற்றுப்புற சூழல் என அனைத்தும் மிகவும் வரவேற்பு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட எனக்கு இந்த அருங்காட்சியகம் முழு திருப்தியை அளித்துள்ளது என்றார்.

