/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாயமான சிறுமிகள் மீட்பு: போக்சோவில் இருவர் கைது
/
மாயமான சிறுமிகள் மீட்பு: போக்சோவில் இருவர் கைது
ADDED : டிச 12, 2025 04:29 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாயமான சிறுமிகள் 3 பேரை கண்டுபிடித்து அழைத்து வந்த போலீசார் இருவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
சிவகங்கை அரசு குழந்தைகள் காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி இருக்கின்றனர். தேவகோட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, மானாமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 1 4 வயது சிறுமி, காளையார்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆகியோர் காதல் உள்ளிட்ட பிரச்னைகளால் வீட்டை விட்டு வெளியேறினர். அந்த சிறுமிகளை போலீசார் மீட்டு பாதுகாப்பு மற்றும் குடும்ப நல ஆலோசனைக்காக சிவகங்கையிலுள்ள காப்பகத்தில் தங்க வைத்திருந்த னர்.
டிச.7 அதிகாலை 3:00 மணிக்கு கழிப்பறையில் உள்ள ஜன்னலை பயன்படுத்தி சிறுமிகள் 3 பேரும் தப்பினர். வார்டன் பாக்கியலட்சுமி போலீசில் புகார் அளித்தார். சிறுமிகளை கண்டு பிடிக்க டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் எஸ்.பி., சிவபிரசாத் தனிப்படை அமைத்தார்.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் காளையார்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அவரது வீட்டிற்கு சென்றது தெரிய வந்து அவரை மீட்டனர்.
மற்ற இருவரும் மதுரையில் வெவ்வேறு வாலிபர்களுடன் தங்கியிருந்துள்ளனர். சிறுமிகளை மீட்ட போலீசார் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகர் காளிமுத்து 21, திண்டுக்கல் மாவட்டம் போலியம்மனுார் சூரியவேல் 21 இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இதேபோல் இந்த காப்பகத்தில் 2023 ஏப்ரலில் இரண்டு சிறுமிகள் தப்பிச்சென்று ஒரு வாரம் கழித்து போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது.

