/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கேரளா வாடல் நோயால் விவசாயிகள்அதிர்ச்சி; மாவட்டத்தில் தென்னை மரங்கள் பாதிப்பு
/
கேரளா வாடல் நோயால் விவசாயிகள்அதிர்ச்சி; மாவட்டத்தில் தென்னை மரங்கள் பாதிப்பு
கேரளா வாடல் நோயால் விவசாயிகள்அதிர்ச்சி; மாவட்டத்தில் தென்னை மரங்கள் பாதிப்பு
கேரளா வாடல் நோயால் விவசாயிகள்அதிர்ச்சி; மாவட்டத்தில் தென்னை மரங்கள் பாதிப்பு
ADDED : அக் 06, 2025 05:52 AM

வைகை ஆறு பாயும் திருப்புவனம் தாலுகாவில் பிரதான தொழிலாக தென்னை விவசாயம் உள்ளது. திருப்புவனம், லாடனேந்தல்,மடப்புரம், திருப்பாச்சேத்தி, கானூர் உள்ளிட்ட பகுதிகளில் 3 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. பெரும்பாலும் நெட்டை மரங்களே நடவு செய்துள்ளனர். நெட்டை ரக மரங்கள் நடவு செய்யப்பட்டு ஆறு ஆண்டுக்கு பின் தேங்காய்கள் காய்க்க தொடங்கும், ஆண்டுக்கு 6 முறை தேங்காய் அறுவடை நடைபெறும்.
நெட்டை மரங்கள் 40 ஆண்டுகள் வரை பலன் தரும். திருப்புவனம் பகுதியில் விளையும் தேங்காய்கள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்ரகாண்ட், சத்தீஷ்கர் மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது. தென்னை மரங்களில் கேரள வாடல் நோய் பாதித்து விளைச்சலின்றி மரங்கள் கருகி வருகின்றன.
நோய் தாக்கிய மரங்களின் மட்டைகள் பச்சை நிறத்தை இழந்து திடீரென உதிர்ந்து விடுகின்றன. நோய் பாதிப்பு கண்டறியவே முடியவில்லை. தென்னை மரங்களில் கடந்தாண்டு வெள்ளை ஈ தாக்குதலால் விளைச்சல் பாதித்த நிலையில் இந்தாண்டு கேரள வாடல் நோய் தாக்கி வருவது விவசாயிகளை அதிருப்திக்கு உள்ளாக்கி வருகிறது.
திருப்பாச்சேத்தி விவசாயி கார்த்திகேயன் கூறியதாவது, கேரளாவில் இந்நோய் கண்டறியப்பட்டது. நோய் பாதித்த மரங்கள் திடீரென காய்ப்பு திறன் குறைந்து விட்டது. மருந்து தெளித்தாலும் அதற்கு கட்டுப்படுவதில்லை. நோய் பாதித்த மரங்களால் விளைச்சல் குறைந்து வருவாய் கிடைக்கவில்லை. தேங்காய் விலை உயர்ந்தாலும் விளைச்சல் இன்றி லாபமின்றி போனது என்றார்.