/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அனைத்திடலில் குடிநீர் தொட்டி அகற்றம்: மக்கள் அவதி
/
அனைத்திடலில் குடிநீர் தொட்டி அகற்றம்: மக்கள் அவதி
ADDED : அக் 06, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : கல்லல் அருகே அனைத்திடல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அகற்றி ஒன்றரை ஆண்டாகியும், மீண்டும் புதிய தொட்டி கட்டப்படாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கல்லல் ஒன்றியம் கூத்தலுார் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்திடல் கிராமம் வீரா நகரில் குடிநீர் மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இத்தொட்டி சேதமானதை தொடர்ந்து, ஒன்றரை ஆண்டிற்கு முன் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் புதிய குடிநீர் தொட்டி கட்டவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டில் இப்பகுதி மக்கள் தவிக்கின்றனர்.