ADDED : மார் 15, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி : கீழடி அருகே பொட்டப்பாளையம் மந்தையம்மன் கோயில் விழாவை முன்னிட்டு நேற்று 3வது ஆண்டாக ஆட்டு கிடா முட்டு சண்டை நடந்தது. திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கமாறன் தொடங்கி வைத்தார்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 240 ஆட்டு கிடாய்கள் போட்டியில் மோதின. போட்டிகளில் பங்கேற்ற அனைத்து கிடாய்களுக்கும் துண்டு, மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அதிக முறை முட்டி எதிராளி கிடாயை விழுத்தாட்டிய கிடாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

