/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிடாமுட்டு போட்டி உயர்நீதிமன்றம் அனுமதி
/
கிடாமுட்டு போட்டி உயர்நீதிமன்றம் அனுமதி
ADDED : மே 08, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சிவகங்கை மாவட்டம் அரியக்குடி பாஸ்கர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: அரியக்குடியில் கோயில் திருவிழாவையொட்டி ஜூன் 15 ல் கிடாமுட்டு போட்டி நடத்த அனுமதி, பாதுகாப்பு கோரி காரைக்குடி தெற்கு போலீசாரிடம் மனு அளித்தோம். நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நிபந்தனைகளுக்குட்பட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.