ADDED : அக் 26, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் நேற்று பட்டப்பகலில் நீண்ட வாளை காட்டி ஒரு கும்பல் வாலிபரை கடத்தி சென்றது.
மேலராங்கியத்தைச் சேர்ந்த பாண்டி மகன் சிதம்பரம் 37, வீடுகளில் இன்வெர்ட்டர், பேட்டரி பொருத்தும் பணி செய்து வருகிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மதியம் லாடனேந்தலில் தனது மாமனார் கட்டி வரும் புது வீடு கட்டட பணியை மேற்பார்வையிட்டார். அப்போது இரண்டு கார்களில் வந்த எட்டு பேர் சிதம்பரத்தை கடத்தினர்.
தடுக்க முயன்றவர்களை நீண்ட வாள், அரிவாளை காட்டி மிரட்டியபடி கார்களில் தப்பினர். மனைவி நிவேதா புகார்படி திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சி.சி.டி.வி., காட்சிகளை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

