/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உயிர் பலி வாங்கும் குகை வழி நீர்ப்பாதை' பிரமனுார் கால்வாயில் தடுப்பு அமையுமா
/
உயிர் பலி வாங்கும் குகை வழி நீர்ப்பாதை' பிரமனுார் கால்வாயில் தடுப்பு அமையுமா
உயிர் பலி வாங்கும் குகை வழி நீர்ப்பாதை' பிரமனுார் கால்வாயில் தடுப்பு அமையுமா
உயிர் பலி வாங்கும் குகை வழி நீர்ப்பாதை' பிரமனுார் கால்வாயில் தடுப்பு அமையுமா
ADDED : அக் 26, 2025 06:53 AM

வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் கண்மாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 750 ஏக்கர் பரப்பளவுள்ள பிரமனுார் கண்மாயை நம்பி ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் பிரமனுார் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. திருப்புவனத்தில் இருந்து எட்டு கி.மீ., துாரம் வாய்க்கால் உள்ளது.
1975ல் மதுரை விரகனுார் மதகு அணை கட்டப்பட்ட பின் கண்மாய்களுக்கு சேதாரமின்றி தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக கால்வாயில் சுவர் கட்டப்பட்டது. திருப்புவனம் திதி பொட்டல் அருகே செல்லும் பிரமனுார் கால்வாயில் 200 மீட்டர் துாரத்திற்கு சிமென்ட் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டது.
குகை வழிப்பாதையின் இருபுறமும் எந்த வித தடுப்பும் அமைக்கப்படவில்லை. பிரமனுார் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் போது குகைப்பாதையை வேடிக்கை பார்க்க, மீன் பிடிக்க வரும் பலரும் தடுமாறி விழுந்து உயிரிழந்ததும் உண்டு. இது வரை ஐந்திற்கும் மேற்பட்டோர் இந்த குகை வழிப்பாதையில் உயிரிழந்துள்ளனர். வருடத்தில் செப்டம்பர் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் இந்த கால்வாயில் நீர் வரத்து இருக்கும்.
மற்ற காலங்களில் நகரின் ஒட்டு மொத்த சாக்கடையும் இந்த கால்வாயில் தான் திறக்கப்படுகிறது. இதனால் குகை வழிப்பாதை சேறும் சகதியுமாக காட்சியளிக்கும்.
ஒவ்வொரு முறையும் உயிர் பலி ஏற்படும் போது குகை வழிப்பாதையில் தடுப்பு அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துவிட்டு அதன்பின் கண்டு கொள்வதில்லை.இந்தாண்டும் 10 நாட்களுக்கும் மேலாக குகை வழிப்பாதையில் தண்ணீர் சென்றவண்ணம் உள்ளது. விபரீதம் ஏற்படும் முன் தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

