/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதியில் விடப்பட்ட கொங்கம்பட்டி ரோடு
/
பாதியில் விடப்பட்ட கொங்கம்பட்டி ரோடு
ADDED : மார் 05, 2024 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள கொங்கம்பட்டிக்கு செல்லும் ரோடு அமைத்து 20 வருடங்களுக்கு மேலானதால் குண்டும், குழியுமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இந்த ரோட்டை சீரமைக்கும் பணி துவங்கி ஜல்லி மட்டும் பரப்பியுள்ளனர்.அடுத்த கட்ட பணி துவங்காத காரணத்தினால் மக்கள் இவ்வழியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிராம மக்கள் கூறுகையில், நீண்ட காலமாக ரோட்டை சீரமைக்க போராடி வந்தோம். பணி துவங்கிய நிலையில் பாதியில் விடப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக கொங்கம்பட்டி ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

