/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்டூர் மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா
/
கோட்டூர் மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா
ADDED : ஏப் 02, 2025 06:36 AM
தேவகோட்டை : கோட்டூர் முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி முளைப்பாரி விழா 24 ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. மறுநாள் வீடுகளில் மக்கள் முளைப்பாரி இட்டனர்.
அபிஷேகத்தை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. வீடுகளில் முளைப்பாரி போடப்பட்டு முளைப்பாரி நாளான நேற்று இரவு பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலில் சேர்த்தனர்.
நேற்று பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தினமும் கோவில் முன்பு பக்தர்கள் முளைக்கொட்டி பாடினர். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் அலங்காரம் செய்து கோட்டூர் கிராமத்திற்கு ஊர்வலமாக சென்று பூச்சொரிதல் செய்து அம்மனை வழிபட்டனர்.

