/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மணிமுத்தாறில் நின்று போன குடிமராமத்து வீணாகும் மழை தண்ணீர்
/
மணிமுத்தாறில் நின்று போன குடிமராமத்து வீணாகும் மழை தண்ணீர்
மணிமுத்தாறில் நின்று போன குடிமராமத்து வீணாகும் மழை தண்ணீர்
மணிமுத்தாறில் நின்று போன குடிமராமத்து வீணாகும் மழை தண்ணீர்
ADDED : ஜன 22, 2025 08:51 AM

தேவகோட்டை : தேவகோட்டை வழியாக செல்லும் மணிமுத்தாறு புதர் மண்டி தண்ணீர் வீணாகி வருகிறது.
திருப்புத்துார் பகுதியில் இருந்து தேவகோட்டை வழியாக மணிமுத்தாறு ஓடுகிறது. திருப்புத்துார், ஏரியூர் பகுதி கண்மாய்கள் நிறைந்தால் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
தேவகோட்டை பகுதியில் 15 கி.மீ. தூரம் இந்த ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஓரிடத்தில் கால்வாய் வெட்டப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் அஞ்சுகோட்டை வரை செல்கிறது.
இதேபோல் இந்த ஆற்று தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டம் நீர் குன்றம் வழியாக கடலுக்குள் செல்கிறது. இந்நிலையில் 15 கி.மீ. தூரமும் முட்புதர் மண்டி அடர்ந்த வனம் போல் காட்சியளிக்கிறது.
இந்த ஆற்றை துார்வாரி பல ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் குடி மராமத்து திட்டத்தில் முட்புதர் அகற்றும் பணி தொடங்கி சில தினங்கள் நடந்தது. என்ன காரணத்தாலோ அப்படியே நின்று விட்டது. மீண்டும் ஆறே தெரியாமல் புதர் மண்டி விட்டது.
நகரை ஓட்டிய பகுதியிலேயே காடு போல் மண்டி உள்ளது. இருக்கும் ஓரிரு தடுப்பு அணைகளிலும் முட் செடி மண்டி கிடப்பதால் அதுவும் செயல்படாமல் உள்ளது.
இந்த ஆற்றில் எழுவங்கோட்டை, ஈகரை, பிரண்டவயல் , கீரணி உட்பட பல பகுதிகளில் ஆற்று மணல் அதிகளவில் உள்ளன. முட்புதராக இருப்பதால், இரவு நேரங்களில் ஆற்று மணல் எளிதாக கடத்தப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஆற்றை கணக்கில் கொள்வதாக தெரியவில்லை.
தேவகோட்டை பகுதியில் ஓடும் மணிமுத்தாற்றில் முட்புதர்களை அப்புறப்படுத்தினால் தண்ணீர் வீணாகாமல் பயனுள்ளதாக இருக்கும்.