நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை; மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி ரதீபா டில்லியில் நேஷனல் கராத்தே கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கட்டா மற்றும் சண்டை பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த போட்டியின் மூலம் உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்ததை தொடர்ந்து தாளாளர் கிறிஸ்டிராஜ்,தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி, முதல்வர்கள் பிருந்தா,வள்ளிமயில் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.