ADDED : ஜன 08, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : அழகப்பா பல்கலை., உறுப்பு கல்லுாரிகளுக்கிடையே விளையாட்டு போட்டி காரைக்குடியில் நடந்தது. கோகோ போட்டியில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் எங் இந்தியா நேரு யுவகேந்திரா சார்பில் சிவகங்கையில் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதில் 100 மீட்டர் ஓட்டத்தில் முதுகலை மாணவர் சுகுமார் முதலிடமும், இளங்கலை மாணவர்கள் தர்மலிங்கம் இரண்டாமிடமும் பெற்றனர். சிலம்ப போட்டியில் இளங்கலை சபரீஷ் இரண்டாமிடம் பெற்றார்.
மாணவர்கள், உடற்கல்வி இயக்குனர் லூர்து ராஜை கல்லுாரி முதல்வர் நாவுக்கரசு, பேராசிரியர்கள் பாராட்டினர்.