ADDED : அக் 02, 2025 11:39 PM

சிவகங்கை; சிவகங்கை அருகே சூரக்குளம் புதுக்கோட்டையில் குயிலி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர், சர்வ கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கலெக்டர் பொற்கொடி தலைமையில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மதிவேந்தன் மாலை அணிவித்தனர். எம்.எல்.ஏ., தமிழரசி, சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, தாசில்தார் மல்லிகா அர்ஜூனா பங்கேற்றனர்.
பா.ஜ., சார்பில் நகர் தலைவர் உதயா, பட்டியலின பொது செயலாளர் ஆதினம், மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., செந்தில்நாதன், தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாநில தலைவர் வரதராஜன், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி ரமேஷ் இளஞ்செழியன், காங்., மாவட்ட தலைவர் சஞ்சய், சமூக விடுதலை கட்சி மாநில தலைவர் ஆறுமுகம், கொங்குநாடு திராவிட கட்சி சக்திவேல், குயிலி பண்பாட்டு மைய நிர்வாகி ராமு, விடுதலை சிறுத்தை கட்சி முத்து ராஜா, அருந்ததியினர் விடுதலை கழகம் இளந்தமிழன், தமிழ் புலிகள் கட்சி பேரறிவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.