sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முத்துமாரியம்மன் கோயிலில் ஜன.22ல் கும்பாபிேஷகம் 

/

முத்துமாரியம்மன் கோயிலில் ஜன.22ல் கும்பாபிேஷகம் 

முத்துமாரியம்மன் கோயிலில் ஜன.22ல் கும்பாபிேஷகம் 

முத்துமாரியம்மன் கோயிலில் ஜன.22ல் கும்பாபிேஷகம் 


ADDED : ஜன 12, 2024 12:13 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காளையார்கோவில் கஸ்துாரிபாய் தெரு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் ஜன.,22 ல் நடைபெறுகிறது.

இக்கோயிலில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு முன் ஆலய கும்பாபிேஷகம் ஜன.,19 அன்று காலை 5:15 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. காலை 8:30 மணிக்கு மகாலட்சுமி ேஹாமம், தனபூஜை, காலை 9:00 மணிக்கு நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தியும், அன்று மாலை 6:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷகம் துவங்குகிறது.

ஜன.20 ம் தேதி காலை 8:15 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஜன., 21 அன்று நான்காம் கால யாகசாலை பூஜை, அன்று மாலை 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. ஜன., 22 அன்று காலை 7:05 முதல் 9:00 மணி வரை ஆறாம் கால யாகசாலை பூஜை, லட்சுமி பூஜை, பிரதான கும்பம் ஆலயம் வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.

அன்று காலை 9:35 மணி முதல் 10:25 மணிக்குள் கடம் புறப்பாடு நடந்து, கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர். அன்று மாலை 4:00 மணிக்கு மகா அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜை, இரவு 8:00 மணிக்கு முத்துமாரியம்மன் திருவீதி உலா நடைபெறும். கும்பாபிேஷக ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us