/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சீனிவாச பெருமாள் கோயிலில் செப்., 11 ல் கும்பாபிேஷகம்
/
சீனிவாச பெருமாள் கோயிலில் செப்., 11 ல் கும்பாபிேஷகம்
சீனிவாச பெருமாள் கோயிலில் செப்., 11 ல் கும்பாபிேஷகம்
சீனிவாச பெருமாள் கோயிலில் செப்., 11 ல் கும்பாபிேஷகம்
ADDED : செப் 02, 2025 11:49 PM
சிவகங்கை; காரைக்குடி அருகே கழனிவாசலில் அலர்மேலு மங்கா சமேத சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிேஷகம் செப்., 11 ல் நடைபெறுகிறது.
இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம் மற்றும் பழைய கோபுரங்கள் புனரமைக்கப்பட்டன. தற்போது கும்பாபிேஷக விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
இக்கோயிலில் செப்., 9 அன்று மாலை 5:30 மணிக்கு அனுக்கை, வாஸ்து ேஹாமத்துடன் கும்பாபிேஷக பூஜை துவங்குகின்றன.
அன்று இரவு 9:00 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, சாற்றுமுறை பூஜை நடக்கும்.
செப்., 10 அன்று காலை 9:00 மணிக்கு பெருமாள், தாயார் நவகலச திருமஞ்சனம், கும்ப பூஜை, பல்வேறு ேஹாமங்கள் நடைபெறும்.
அன்று மதியம் 2:00 மணிக்கு அஷ்ட பந்தனம் சாத்துதல், இரவு 8:45 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெறும். செப்., 11 அன்று காலை 7:00 மணிக்கு மகா கும்ப பூஜை, பஞ்ச உபநிஷத் ேஹாமம், காலை 9:30 மணிக்கு புனித தீர்த்த கடம் புறப்பாடாகி, காலை 10:15 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.